என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை
    X

    தருமபுரி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தருமபுரி நகரப் பகுதியில் பெருகி வரும் நாய்கள் தொல்லையால் சாலையில் நடக்க முடியவில்லை.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி கவுன்சிலர்கள் பேசினார்கள்.

    தருமபுரி,

    தருமபுரி நகராட்சி கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்டம் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். ஆணையாளர் சித்ரா சுகுமார், நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வருவாய் ஆய்வாளர் மாதையன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட 32 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

    தருமபுரி நகராட்சியில் உள்ள புறநகர் மற்றும் டவுன் பஸ் நிலையங்களை ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பில் மேம்படுத்தும் பணி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தருமபுரி டவுன் பஸ் நிலையத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைத்தல், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக நகராட்சி பகுதியில் குப்பைகள் அகற்றும் பணி மற்றும் சாக்கடை கழிவுநீர் கால்வாய் தூர் வாரும் பணி தனியாரிடம் ஒப்படைப்பது.

    தருமபுரி நகரப் பகுதியில் பெருகி வரும் நாய்கள் தொல்லையால் சாலையில் நடக்க முடியவில்லை. உடனே நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெசவாளர் நகர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் இயக்கப்படுகிறது.

    ஆனால் நெசவாளர் நகரில் உள்ள பகுதிகளுக்கு இதுவரை குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை உடனடியாக அந்தப் பகுதிகளுக்கும் உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் நிலையங்கள் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் எரியாமல் உள்ள மின்விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி கவுன்சிலர்கள் பேசினார்கள்.

    இந்த கூட்டத்தில் நகராட்சி உதவி பொறியாளர் சரவணகுமார், வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளர்கள் சுசீந்திரன், கோவிந்தராஜ், சீனிவாசலு, சந்திரகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டானர்.

    Next Story
    ×