search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடியில் கற்களை வைத்து அ.தி.மு.க. கவுன்சிலர் மறியல் போராட்டம்
    X

    போராட்டத்தில் ஈடுபட்ட அ .தி.மு.க. கவுன்சிலர் கலைச்செல்வியிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    போடியில் கற்களை வைத்து அ.தி.மு.க. கவுன்சிலர் மறியல் போராட்டம்

    • கனரக வாகனங்கள் மின்வயர்களை துண்டித்து செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
    • நடவடிக்கை எடுக்கா விட்டால் மீண்டும் மக்களை திரட்டி மறியல் போரா ட்டத்தில் ஈடுபட போவ தாகவும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடியில் இருந்து மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய பகுதியான இரட்டை வாய்க்கால் பகுதியில் ெரயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதனால் கேரளாவிற்கு செல்லும் பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் போடி 6 வது வார்டு உழவர் சந்தை 100 அடி சாலை வழியாக கேரளாவிற்கு சென்று வருகின்றன.

    இப்பகுதியில் வரும் கனரக வாகனங்கள் மின்வயர்களை துண்டித்து செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அடிக்கடி மின் வெட்டு ஏற்படும் சூழல் உள்ளது. இது குறுத்து அ.தி.மு.க கவுன்சிலர் கலைச்செல்வி நகராட்சி மற்றும் மின்சார வாரியத்தில் புகார் தெரிவித்தார்.

    எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில் மின்சார வயர்களை மாற்றி அமைக்கும் செலவுகளை அப்பகுதி மக்களே அவரவர் சொந்த செலவில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கவுன்சிலர் கலைச்செல்வி வாகனங்கள் செல்லும் பாதையில் பெரிய கற்களை வைத்து சாலையை மறித்து கனரக வாகனங்கள் இப்பகுதியில் செல்லக்கூ டாது என தடுத்தி நிறுத்தி மக்களுடன் சேர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போடி நகர் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரேம் ஆனந்த், மணிகண்டன் ஆகியோர் வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வார்டு கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் வீடுகளுக்கு செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி தருமாறும் அதற்குரிய செலவை நகராட்சியும் மின்வாரியமும் ஏற்று க்கொள்ள வேண்டும் என்றனர்.

    இதற்கு உரிய தீர்வு காண்பதாக நகராட்சி தலைவர் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் தற்காலிகமாக போரா ட்டத்தை கைவிட்டனர். நடவடிக்கை எடுக்கா விட்டால் மீண்டும் மக்களை திரட்டி மறியல் போரா ட்டத்தில் ஈடுபட போவ தாகவும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தொகுதியில் நலத்திட்டங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் கவுன்சிலர் குற்றம் சாட்டி னார்.

    Next Story
    ×