என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஒரேநாளில் 31 பேருக்கு தொற்று-கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா
- கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
- குடும்பத்தில் ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டால், குடும்பத்தில் உள்ள அனைவரையும் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை:
கோவையில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு தற்போது இரட்டை இலக்கத்தில் பதிவாகி வருகிறது.
நேற்றுமுன்தினம் 39 பேருக்கு பதிவாகி இருந்த நிலையில் நேற்று சற்று குறைந்து 31 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 192 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக கொரோனா பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் கடந்த சில வாரங்களில் தினமும் 300 முதல் 400 பேருக்கு கொரோனாபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது தினமும் 600 முதல் 700 பேர் வரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் நோய் தொற்று பாதிப்பு குறைந்திருந்ததால், கடந்த வாரங்களில் நோய் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சளி, மூச்சுத்திணறல், போன்ற பாதிப்புகளால் அனுமதிக்கப் படுபவர்களுக்கு மட்டுமே, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
தற்போது நோய் பரவல் அதிகரித்து வரும் சூழலில் நாள் ஒன்றுக்கு 700-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டால், குடும்பத்தில் உள்ள அனைவரையும் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைவரும் சமூக இடைவெளி பின்பற்றுதல், முக கவசம் அணிதல் போன்ற அரசு வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும். தடுப்பூசி செலுத்தாத நபர்கள், உடனடியாக செலுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.