என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு ஆலோசனை கூட்டம்
  X

  கோப்பு படம்

  பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு ஆலோசனை கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெரிய குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.
  • கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

  பெரியகுளம்:

  தேனிமாவட்டம் பெரிய குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தி ற்கு ஒன்றிய குழு பெருந்தலை வர் தங்கவேல் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) ஜெகதீசன் முன்னிலை வகித்தார்.

  மேலும் இக்கூட்டத்தில் வட்டார சுகாதார மே ற்பார்வையாளர் பவான ந்தன் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்தும், ஊராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக எடுத்து ரைத்து பேசினார்.

  இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் சர வணன், சாந்தி பாண்டியன், பாக்கியம் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கீழவடகரை செல்வராணி செல்வராஜ், பொம்மிநாய க்கன்பட்டி சம்சுல்குதா ரபீக், டி.வாடிப்பட்டி தங்கராஜ், எருமலைநாயக்கன்பட்டி பால்ராஜ், சருத்துப்பட்டி சாந்தி கண்ணையன், ஜெயமங்கலம் அங்கம்மாள் சப்பாணி மற்றும் ஊராட்சி செயலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×