என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
  X

  பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வாகி பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
  • 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மனோபாலாஜி 600 க்கு 593 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.

  பட்டுக்கோட்டை:

  பட்டுக்கோட்டை வட்டம் சுக்கிரன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பிருந்தாவன் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

  இந்நிகழ்வில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மனோபாலாஜி 600 க்கு 593 மதிப்பெண் பெற்று முதலிடமும், ராஜ்கனிகா 600 க்கு 592 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், 600 க்கு 587 இடம்பெற்று மூன்றாம் இடத்தை பாலாஜி, சிவனேசன், அமிர்தா ஆகிய மூன்று மாணவ-மாணவிகள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

  10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கே.பி. தினேஷ்குமரன் 500-க்கு 484 மதிப்பெண் பெற்று முதலிடமும், பிரபா மற்றும் ஹர்சினி 500 க்கு 480 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், 500-க்கு 479 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை சுதந்திர பைரவியும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.அதிக மதிப்பெண் பெற்று தேர்வாகி பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

  இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் சரவணன், செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் மோகன், இயக்குனர்கள்ராமையா, ரத்தினகுமார், ராஜமா ணிக்கம், சுவாமிநாதன், மருத்துவர்கள் கவுசல்யா ராமகிருஷ்ணன், ராமகிரு ஷ்ணன், கண்ணன், பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் தலைமையாசிரியர் முகமது அக்பர் அலி மற்றும் இருபால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×