என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சிவகிரியில் மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான மாநாடு
  X

  மாநாட்டில் வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் பேசிய போது எடுத்த படம்.


  சிவகிரியில் மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான மாநாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாநாட்டிற்கு சிவகிரி தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார்.
  • யூனியன் சேர்மன் பொன்முத்தையாபாண்டியன், ஜமீன்தார் விக்னேஷ் ராஜா, அரசுமருத்துவர் இசக்கி, நெல்லை மாவட்ட பொறுப்பாளர்கள் குமாரசாமி, தியாகராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

  சிவகிரி:

  தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான தென்காசி மாவட்ட முதல் மாநாடு சிவகிரியில் நடைபெற்றது. முதல் நிகழ்வாக சிவகிரி பேருந்து நிலையம் முன்பு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில தலைவர் ஜான்சிராணி சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்.

  மாநாட்டிற்கு சிவகிரி தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் வரவேற்று பேசினார். வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன்முத்தையாபாண்டியன், ஜமீன்தார் விக்னேஷ் ராஜா, அரசுமருத்துவர் இசக்கி, நெல்லை மாவட்ட பொறுப்பாளர்கள் குமாரசாமி, தியாகராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

  மாநில தலைவர் ஜான்சிராணி தலைமையில் புதிய நிர்வாகிகள் சங்கத்தின் தலைவராக தங்கம், செயலாளர் சக்திவேல், பொருளாளர் கணேசன், துணைத்தலைவராக மாரிமுத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத்தலைவர் ஜான்சிராணி நிறைவுரையாற்றினார். கணேசன், மாரிமுத்து ஆகியோர் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்த பகத்சிங், சுந்தரவடிவேல், செயலர் தங்கேஸ்வரன், தலைமையாசிரியர் கற்பகராஜ், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் பாப்புராஜ், ஜெயராஜ், கிருஷ்ணன், ரவிந்திரநாத்பாரதி, ஆட்டோ சக்திவேல், சுப்பிரமணியன், சுப்புலட்சுமி, சிவசுப்பிரமணியன், மகேஷ், சாந்தி, புஷ்பம், முத்துமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×