search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊராட்சி தலைவரை கண்டித்து   துணைத் தலைவர், உறுப்பினர்கள் தர்ணா
    X

    துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    ஊராட்சி தலைவரை கண்டித்து துணைத் தலைவர், உறுப்பினர்கள் தர்ணா

    • தும்பல் ஊராட்சி தலைவரை கண்டித்து துணைத் தலைவர், உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஊராட்சி மன்ற வரவு செலவு கணக்குகளை காட்டு–வதில்லை.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட தும்பல் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த சடையன் உள்ளார். மேலும் இங்கு துணைத் தலைவர் உட்பட 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் சடையன் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், மன்ற கூட்டங்களை நடத்துவது இல்லை எனவும், ஊராட்சி மன்ற தலைவரின் மகன் ஊராட்சி நிர்வாகத்தில் தலையிட்டு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்தன.

    மேலும் அவர் ஊராட்சி மன்ற வரவு செலவு கணக்குகளை காட்டு–வதில்லை. எந்த பணிகள் எங்கு நடைபெற்றது என்று வார்டு உறுப்பினர்கள் கூட தெரியாத அளவிற்கு நடைபெறுகிறது.

    இதுபற்றி கேட்டால் பதவியிலிருந்து உங்களை நீக்கி விடுவேன் என அவர் மிரட்டுவதாகவும் உறுப்பினர்கள் புகார் கூறியுள்ளனர்.

    இதை தொடர்ந்து ஊராட்சி தலைவர் சடையன் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன், வார்டு உறுப்பினர்கள் தனபால் ,சரிதா, குமாரி, சசிகலா ,விஜயா, ராஜேஸ்வரி ,சித்தேஸ்வரன், பசுபதி, ஆகியோர் ஊராட்சி அலுவ–லகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×