search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை நூலகத்தில் மாணவ,மாணவிகளுக்கு போட்டிகள்
    X

    நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்த படம்.


    செங்கோட்டை நூலகத்தில் மாணவ,மாணவிகளுக்கு போட்டிகள்

    • செங்கோட்டை நூலகத்தில் அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி மாணவ- மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை, ஓவியம் மற்றும் கவிதை போட்டிகள் நடைபெற்றது.
    • செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரிகளில் இருந்து 200 மாணவர்கள் கலந்து கொண்டனர்

    செங்கோட்டை:

    செங்கோட்டை நூலகத்தில் அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி மாணவ- மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை, ஓவியம் மற்றும் கவிதை போட்டிகள் நடைபெற்றது.

    இதில் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரிகளில் இருந்து 200 மாணவர்கள் கலந்து கொண்டனர். வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். விழுதுகள் சேகர், இணைச் செயலாளர் செண்பக குற்றாலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்ட பொருளாளர் தண்டமிழ் தாசன் சுதாகர் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ., கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். செங்கோட்டை முன்னாள் நகர்மன்றத் தலைவர் ரஹீம், பெரிய பிள்ளைவலசை பஞ்சாயத்துதலைவர் வேலுசாமி, இலஞ்சி ராமசாமி பிள்ளை பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம், எஸ்.ஆர்.எம். பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்வாணி, தென்காசி பணி நிறைவு புலவர் அருணாச்சலம், வழக்கறிஞர் சுபசேகர் டேனியல், கல்லூரி நூலகர் ஏஞ்சலின் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

    ஜேபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் ஆசிரியர் ராஜன் ஜான்,எஸ்.ஆர்.எம். பள்ளி தமிழ் ஆசிரியர் சுசீலா, எஸ்.எம்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் சிவசுப்பிரமணியன், பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் ஜவகர்லால் நேரு, ஜே.பி. கல்வியல் கல்லூரி மாணவிகள், நூலக ஓவிய ஆசிரியர் ஆகியோர் போட்டிகளுக்கு நடுவராக செயல்பட்டனர். நூலகர் ராமசாமி நன்றி கூறினார்

    Next Story
    ×