என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோவையில் கல்லூரி மாணவர் மர்ம சாவு
  X

  கோவையில் கல்லூரி மாணவர் மர்ம சாவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அர்ஜூன் கோவை தனியார் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
  • கடந்த 3 நாட்களாக உடல் நலம் சரியில்லாததால் அர்ஜூன் கல்லூரிக்கு செல்லவில்லை.

  கோவை,

  கோவை கணபதி சுபாஸ் நகரை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் அர்ஜூன் (வயது17). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி செல்வதற்கு வசதியாக பீளமேடு காந்திமாநகரில் அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இந்தநிலையில், கடந்த 3 நாட்களாக உடல் நலம் சரியில்லாததால் அர்ஜூன் கல்லூரிக்கு செல்லாமல் அறையில் இருந்து வந்தார்.

  நேற்று முன்தினம் விஜயலட்சுமி தனது மகனிடம் செல்போனில் பேசினார். அதன்பின்னர் நேற்று மீண்டும் தொடர்பு கொண்ட போது செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் தனது மகன் தங்கியிருக்கும் அறைக்கு சென்று கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அர்ஜூன் மர்மமான முறையில் கிடந்தார். மகனின் உடலை பார்த்து விஜயலட்சுமி கதறி அழுதார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவர் உடல் நல பாதிப்பால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×