என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தனியார் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு
  X

  தனியார் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதலுதவி பெட்டி, வாகனத்தின் தரைதளம், கை ப்ரேக் ஆகியவை சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களையும் இம்மாத இறுதிக்குள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

  தருமபுரி,

  தருமபுரி மாவட்டம், தருமபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு நடைபெற்றது.

  மாவட்ட கலெக்டர் சாந்தி பள்ளி வாகனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி வாகனங்களில் அரசின் அனைத்து விதிமுறைகளும் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை உரிய முறையில் ஆய்வு செய்திட வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

  தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதிகள் 2012, விதி 11- ன்படி ஒவ்வொரு வருடமும் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்ய மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவர் வருவாய் கோட்ட அலுவலர் ஆகும். உறுப்பினர்களாக 1. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் 2. துணை காவல் கண்காணிப்பாளர் 3. முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் 4. மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை -1 ஆகியோர் உள்ளனர்.

  இக்குழுவினர் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் பொதுவான ஓர் இடத்தில் வாகனங்களின் தகுதி குறித்து கூட்டு ஆய்வு மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

  இதன்படி, 2023-2024 ஆண்டிற்கான, தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் பாலக்கோடு பகுதி அலுவலகங்களை சார்ந்த பள்ளி வாகனங்கள் தருமபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

  இந்த ஆய்வில் 220 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் குறைபாடுகளுடைய 4 வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது.

  மேலும், சிறு குறைபாடுகளுடைய 22 வாகனங்கள் கண்டறியப்பட்டு, அவ்வாகனங்களின் குறைகளை நிவர்த்தி செய்து ஒரு வார காலத்திற்குள் மீண்டும் ஆய்விற்கு உட்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

  இந்த சோதனையில் பள்ளி வாகனங்களில் அவசர கால வழி, பள்ளி பேருந்தில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ் கருவி, தீயணைப்பு கருவி, இருக்கைகள் எண்ணிக்கை, முதலுதவி பெட்டி, வாகனத்தின் தரைதளம், கை ப்ரேக் ஆகியவை சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

  மேலும், ஆய்விற்கு வராத பள்ளி வாகனங்கள் பொதுச்சாலையில் இயக்குவது கண்டறியப்பட்டால் வாகனம் இயக்க விடாமல் தடைசெய்வதற்கான உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

  மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களையும் இம்மாத இறுதிக்குள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

  இந்த ஆய்வின் போது சேலம் துணைப் போக்குவரத்து ஆணையர் பிரபாகரன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன், முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தரணீதர், வெங்கிடுசாமி, காவல் ஆய்வாளர் நவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×