search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் சுதந்திர தின விழா ரூ.88 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் விசாகன் வழங்கினார்
    X

    திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் விசாகன் தேசியக் கொடி ஏற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    திண்டுக்கல்லில் சுதந்திர தின விழா ரூ.88 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் விசாகன் வழங்கினார்

    • திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் 76-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
    • 593 பயனாளிகளுக்கு ரூ.88 லட்சத்து 40 ஆயிரத்து 494 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் 76-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் விசாகன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மூவர்ண பலூ ன்களை பறக்க விட்டார்.

    மேலும் சமாதானத்தின் அடையாளமாக வெண் புறாக்களும் பறக்க விடப்பட்டன. இதனைத் தொடர்ந்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.

    நலத்திட்டம்

    அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மாற்றுத்திற னாளிகள் நலத்துறை, முன்னாள் படைவீரர் நலன், வேளாண்மை துறை, தாட்கோ, வருவாய்த்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், உள்ளிட்ட துறைகளில் 593 பயனாளிகளுக்கு ரூ.88 லட்சத்து 40 ஆயிரத்து 494 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் சுதந்திர போராட்ட தியாகி களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். வயது மூத்த தியாகிகளின் வீடுகளுக்கே சென்று கவுரவப்படுத்தப்பட்டனர்.

    இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவி களின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தேச ஒற்றுமை, விடுதலை போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் மாணவிகள் நடத்திக் காட்டிய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    Next Story
    ×