search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்கன்வாடி மையத்தில் உள்ள  குழந்தைகளை தாய் உள்ளத்தோடு கண்காணிக்க வேண்டும்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு
    X

    ஊட்டச்சத்து பெட்டகத்தினை பயனாளிகளுக்கு அமைச்சர் செஞ்சிமஸ்தான் வழங்கினார். 

    அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளை தாய் உள்ளத்தோடு கண்காணிக்க வேண்டும்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு

    • அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளை தாய் உள்ளத்தோடு கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் வலியுறுத்தினார்.
    • புதிய சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் மேல்மலையனூர் ஒன்றியம் வளத்தியில் நடைபெற்றது. மாவட்ட திட்ட அலுவலர் அன்பழகி தலைமைதாங்கினார்.மேல்மலையனூர் ஒன்றியே சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார்.குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சவுமியாவரவேற்றார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில்செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் அங்கன்வாடி மையங்களுக்கு வருகை தரும் குழந்தைகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தாயுள்ளத்தோடு சென்று அவர்களை கண்காணிக்க வேண்டும். மேலும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் பணியாளர்கள் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உடன் கூடிய சத்துணவுகளை முறையாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    .முன்னதாக வளத்தி ஊராட்சியில் பொது நிதி சார்பில் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து கட்டப்பட்ட புதியசின்டெக்ஸ் குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சுப்பிரமணியன், நாராயணசாமி, ஒன்றிய துணை சேர்மன் விஜயலட்சுமி முருகன், ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், சிலம்பு செல்வன்,மாவட்ட கவுன்சிலர் செல்வி ராம சரவணன் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×