search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
    X

    ஆய்வுகூட்டத்தில் கலெக்டர் முரளிதரன் பேசினார்.

    தேனி மாவட்டத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

    • தேனி மாவட்டத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
    • மாதந்தோறும் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளை கண்காணித்து அவர்களின் வளர்ச்சிநிலையை மேம்படுத்திட அறிவுறுத்தப்பட்டது

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது,

    மாவட்டத்தில் 6 வயது வரை உள்ள குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளை விரைவாக மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தி கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை மாவட்ட ஆரம்பகால குழந்தைகள் மருத்துவ ஆய்வுப்பிரிவு மற்றும் நோய்வாய்பட்டு பிறந்த குழந்தைகள் பராமரிப்பு பிரிவுகளுக்கு அனுப்பி விரிவான மருத்துவ பரிசோதனை செய்து வட்டாரம் வாரியாக தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டம் செயலியில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

    மேலும், விடுபட்ட குழந்தைகளை விரைந்து மருத்துவ ஆய்விற்கு உட்படுத்தி அதன் விவரங்களை பதிவேற்றம் செய்திட வேண்டும்.

    போஷான் டிராக்கர் செயலியில் ஒவ்வொரு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட பயனாளிகளுக்கும் ஆதார் எண்ணை இணைத்து சரிபார்த்து அதனை உறுதி செய்து வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் அனைத்து பயனாளிகளுக்கும் இணைக்கும் பணியினை நிறைவு செய்திட வேண்டும்.

    அனைத்து அங்கன்வாடி பணியாளர்களும் போஷான் டிராக்காரில் வருகை பதிவுகள் மற்றும் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எடை மற்றும் உயரம் முறையாக எடுத்து பதிவேற்றம் செய்திடவேண்டும்.

    மாதந்தோறும் அங்கன்வாடி மையங்களில் நடைபெறும் சமுதாயம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் கிராம சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த நிகழ்வுகளை சிறப்பாக நடத்தி விடுபடாமல் பதிவிடவும், மாதந்தோறும் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளை கண்காணித்து அவர்களின் வளர்ச்சிநிலையை மேம்படுத்திட சுகாதார துறையுடன் ஒருங்கிணைந்து பணியாற்றிட துறை சார்ந்த அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.

    Next Story
    ×