என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நெல்லையில் இன்று செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக விழிப்புணர்வு போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.
  • நெல்லை மாவட்ட நிர்வாகம், நெல்லை மாவட்ட விளையாட்டு துறை சார்பில் பாளை வ.உ.சி. உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று போட்டிகள் நடைபெற்றது.

  நெல்லை:

  சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக விழிப்புணர்வு போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.

  நெல்லை மாவட்ட நிர்வாகம், நெல்லை மாவட்ட விளையாட்டு துறை சார்பில் பாளை வ.உ.சி. உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று போட்டிகள் நடைபெற்றது.

  அதனை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்து பார்வையிட்டார். போட்டியில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

  முன்னதாக செஸ் போர்டு வடிவிலான பிரம் மாண்டமான கேக்கினை வெட்டி பொதுமக்களுக்கு சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

  தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

  பின்னர் மது பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கும் வகையில் மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை சபாநாயகர் தொடங்கி வைத்தார்.

  வ.உ.சி. மைதானத்தில் தொடங்கிய பேரணி அரசு அருங்காட்சியகத்தில் முடிவடைந்தது. இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

  நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு, அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி, மாவட்ட சதுரங்க சங்கத்தை சேர்ந்த பால் குமார், செல்வ மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×