search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம்
    X

    கோப்புபடம்

    2 ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம்

    • கோவை-லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் 28-ந் தேதி சேலம், திருப்பத்தூர், பங்கார்பேட்டை வழியாக இயக்கப்படும். தர்மபுரி, ஓசூர் செல்லாது.
    • எர்ணாகுளம்-கே.எஸ்.ஆர். பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 28-ந் தேதி சேலம், திருப்பத்தூர், பங்கார்பேட்டை வழியாக இயக்கப்படும். தர்மபுரி, ஓசூர், கார்மேளரம் செல்லாது.

    திருப்பூர்

    ஓமலூர்-மேட்டூர் அணை இடையே இரட்டை ரெயில் தண்டவாள பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால் அந்த வழியாக வருகிற 28-ந் தேதி 2 ரெயில்கள் தடை செய்யப்பட்டுள்ளது. வேறு வழியாக மாற்றி இயக்கப்படுகிறது.

    அதன்படி கோவை-லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.11014) வருகிற 28-ந் தேதி காலை 8.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும். இந்த ரெயில் சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக செல்வது வழக்கம். ஆனால் இந்த இந்த ரெயில் அன்று சேலம், திருப்பத்தூர், பங்கார்பேட்டை வழியாக இயக்கப்படும். தர்மபுரி, ஓசூர் செல்லாது.

    அதுபோல் எர்ணாகுளம்-கே.எஸ்.ஆர். பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.12678) வருகிற 28-ந் தேதி காலை 9.10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும். வழக்கமாக சேலம், தர்மபுரி, ஓசூர், கார்மேளரம் வழியாக இயக்கப்படும். ஆனால் அந்த ரெயில் 28-ந் தேதி சேலம், திருப்பத்தூர், பங்கார்பேட்டை வழியாக இயக்கப்படும். தர்மபுரி, ஓசூர், கார்மேளரம் செல்லாது. இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×