என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் 19 பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து
- வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- வேகக்கட்டுப்பாட்டு கருவி, சி.சி.டி.வி காமிரா, அவசர காலத்தில் வெளியேறும் வழி செயல்படும் நிலையில் இருக்க வேண்டும்.
கோவை:
கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் குறித்து போக்குவரத்துத் துறை, பள்ளிக் கல்வித் துறை, காவல்துறை ஆகிய அரசுத் துறைகள் இணைந்து பி.ஆர். எஸ் மைதானத்தில் நேற்று கூட்டாய்வு செய்தனர்.
இந்தப் பணியை நேரில் ஆய்வு செய்த பின்னர் மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியதாவது: - கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும் உட்பட்ட 230 தனியார் பள்ளிகளைச் சார்ந்த 1,265 பஸ்கள் ஆய்வு செய்யும் பணி நடைபெற உள்ளது. அதன்படி, தனியார் பள்ளி பஸ்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
முதல்நாளில் 734 பள்ளிப் பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வில் 19 பள்ளி வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட பள்ளி வாகன டிரைவர்களுக்கு முழு உடற்தகுதி சோதனை நடத்த வேண்டும்.
65 வயதுக்கு மேற்பட்ட பள்ளி வாகன டிரைவர்கள் இருந்தால் அவர்களை தங்கள் பள்ளியில் அலுலகம் சார்ந்த மற்றும் பிற பணிகள் மேற்கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு பஸ்களிலும் முதலுதவி பெட்டி, தீ தடுப்பான் உள்ளிட்டவை கட்டாயம் செயல்படும் நிலையிலும், காலாவதியாகாமல் இருக்கவேண்டும்.
மேலும், வேகக்கட்டுப்பாட்டு கருவி, சி.சி.டி.வி காமிரா, அவசர காலத்தில் வெளியேறும் வழி செயல்படும் நிலையில் இருக்க வேண்டும். படிக்கட்டுகளின் உயரம் பள்ளி குழந்தைகளுக்கு ஏறுவதற்கு தகுந்தவாறு இருக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது போக்குவரத்து இணை ஆணையர் பொன் செந்தில்நாதன், துணை ஆணையர் மதியழகன் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.