என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நாமக்கல் பஸ் நிலையத்தில் திருட்டை தடுக்க சி.சி.டி.வி கேமரா திறப்பு
  X

  நாமக்கல் பஸ் நிலையத்தில் திருட்டை தடுக்க சி.சி.டி.வி கேமரா திறப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
  • அதன்படி அரிமா சங்கம் சார்பில் புதிதாக சி.சி.டி.வி கேமரா அமைக்கப்பட்டது.

  நாமக்கல்:

  நாமக்கல் பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் சிறு சிறு சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.

  இதனை தடுக்கும் வகையிலும், குற்றவாளி களை எளிதில் அடையாளம் காணும் வகையிலும் பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் சி.சி.டி.வி கேமரா அமைக்க முடிவு செய்யப்பட்டது.

  அதன்படி அரிமா சங்கம் சார்பில் புதிதாக சி.சி.டி.வி கேமரா அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா மற்றும் தொடக்க நிகழ்ச்சி நேற்று பஸ் நிலைய பகுதியில் நடந்தது.

  இதில் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் சி.சி.டி.வி கேமரா செயல்பாட்டை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் கேமராவின் செயல்பாடுகள் மற்றும் அதன் பயன்பாடு குறித்தும், பயணிகள் விழிப்போடு இருக்க வேண்டும் என்பது குறித்தும் அறிவுரை வழங்கினார். முதல் கட்டமாக 8 கேமராக்கள் செயல்பாட்டை தொடங்கி வைத்தவர். தொடர்ந்து 32 கேமராக்கள் அமைக்கப்படும் எனவும் கூறினார்.

  இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மற்றும் போலீசார், அரிமா சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×