என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  இழப்பீட்டு தொகையை கொடுக்க மறுத்த மூதாட்டி மீது வழக்கு
  X

  இழப்பீட்டு தொகையை கொடுக்க மறுத்த மூதாட்டி மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 2016 -ம் ஆண்டு ஒரு வழக்கு சம்பந்தமாக சேலம் தலைமை நீதித்துறை நடுவர் மன்றம் மூலம் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 1.50 லட்சம் சுசீலா வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
  • பல்வேறு முறை அறிவுறுத்தியும் சுசீலா பணத்தை திரும்ப செலுத்தாததால் கோர்ட்டு சிரஸ்தார் செந்தில்குமார் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

  கொண்டலம்பட்டி:

  சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பாரகல்லூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி சுசீலா (வயது 76). இவருக்கு கடந்த 2016 -ம் ஆண்டு ஒரு வழக்கு சம்பந்தமாக சேலம் தலைமை நீதித்துறை நடுவர் மன்றம் மூலம் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 1.50 லட்சம் சுசீலா வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

  இந்தநிலையில் தவறுதலாக மீண்டும் ஒருமுறை சுசீலா வங்கிக் கணக்கிற்கு ரூ. 1.50 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. 2-வது முறை செலுத்தப்பட்ட பணத்தை திருப்பி செலுத்துமாறு கோர்ட்டு மூலம் பல்வேறு முறை அறிவுறுத்தியும் சுசீலா பணத்தை திரும்ப செலுத்தாததால் கோர்ட்டு சிரஸ்தார் செந்தில்குமார் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்ேபரில் போலீசார், சுசீலா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×