என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
நாங்குநேரி நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி மீன் வியாபாரி பலி
- கன்னியாகுமரியில் இருந்து தேனி நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக சுப்பையாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
- விபத்து தொடர்பாக கார் டிரைவரான கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அஸ்வின், ஆம்னி பஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே உள்ள நெடுங்குளத்தை சேர்ந்தவர் சுப்பையா(வயது 54). மீன் வியாபாரி. இவர் இன்று அதிகாலை மீன் எடுப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் நாங்குநேரி நான்கு வழிச்சாலையில் இருந்து நம்பிநகருக்குள் திரும்பினார்.
அப்போது கன்னியாகுமரியில் இருந்து தேனி நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக சுப்பையாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சாலையின் எதிர்திசையில் சுப்பையா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அந்த நேரத்தில் எதிர்திசையில் சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த ஆம்னிபஸ் சுப்பையாவின் மீது ஏறி இறங்கியது. உடனே ஆம்னி பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். அப்போது பின்னால் மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த அரசு பஸ், ஆம்னி பஸ்சின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்சின் முன்புறம் இருந்த கண்டக்டர், டிரைவர் உள்பட 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று காயம் அடைந்த 7 பேரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கார் டிரைவரான கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அஸ்வின் (28), ஆம்னி பஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.