என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும்- கலெக்டர் பேச்சு
  X

  கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

  பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும்- கலெக்டர் பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் போன்ற பல்வேறு நன்மைகள் பயன்பெற முடியும்.
  • தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைப்பு மையங்களில் உள்ள சமையல் கூடங்களில் சமைத்து உணவு வழங்கப்பட உள்ளது.

  தஞ்சாவூர்:

  அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்துவது குறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

  இக்கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:-

  தமிழக முதல்-அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து முதற்கட்டமாக மாநகராட்சி பகுதிகள் அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களில் காலை உணவு வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதுஇத்திட்டத்தின் மூலம் மாணவ-மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல், மாணவ-மாணவியர்கள் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் பாதிக்க ப்படாமல் இருப்பதை உறுதி செய்தல், மாணவ-மாணவியர்களின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், குறிப்பாக இரத்த சோகை குறைப்பாட்டினை நீக்குதல், பள்ளிகளில் மாணவ-மாணவியர்களின் வருகையை அதிகரித்தல் மற்றும் கல்வியில் தக்கவைத்து கொள்ளுதல், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் போன்ற பல்வேறு நன்மைகள் பயன்பெற முடியும்.

  தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் மாநகராட்சியில் 8 தொடக்கப் பள்ளியில் 375 மாணவ- மாணவியர்களும், கும்பகோணம் மாநகராட்சியில் 13 தொடக்கப் பள்ளிகளும் 1067 மாணவ மாணவியர்கள் என மொத்தம் 21 மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 1442 மாணவ- மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறு வார்கள். தஞ்சாவூர் மாநகராட்சி பள்ளிகளுக்கான ஒருங்கி ணைப்பு மையம் கூட்டுறவு காலனி மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும், கும்பகோணம் மாநகராட்சி பள்ளிகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் கோபு சிவகுருநான் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைப்பு மையங்களில் உள்ள சமையல் கூடங்களில் சமைத்து உணவு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

  இக்கூட்டத்தில் மாநக ராட்சி ஆணையர்கள் சரவணகுமார் (தஞ்சாவூர்), செந்தில்முருகன் (கும்பகோணம்), முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×