என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பென்னாகரம் அருகே உடல் வீச்சு: வாலிபரை கொன்று எரித்த மர்ம கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம்
  X

  பென்னாகரம் அருகே உடல் வீச்சு: வாலிபரை கொன்று எரித்த மர்ம கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மோப்பநாய் அந்த இடத்தையே சுற்றி சுற்றி வந்தது.
  • இடது கையில் 5 விரல்களும், நகக்கன்றுகள் இல்லாமல் மொட்டையாக இருந்தது.

  ஏரியூர்,

  தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே மஞ்சநாயக்கன அள்ளி பஞ்சாயத்து நரசிபுரம் மயானம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், பாதி எரிந்த நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். நேற்று அந்த இடத்தில் மாடு மேய்க்கச் சென்ற முதியவர் ஒருவர், இதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

  தகவலின் பேரில், தருமபுரி மாவட்ட எஸ்.பி.கலைச்செல்வன் மற்றும் பெரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

  சடலமாக கிடந்த வாலிபரின் நெஞ்சு பகுதி முழுவதும் தீயால் கருகியிருந்தது. இதனால், அவரை வேறு எங்கோ கொலை செய்து விட்டு, இரவோடு இரவாக சடலத்தை கொண்டு வந்து அப்பகுதியில் வீசிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

  அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக சடலத்தை எரிக்க முயன்றுள்ளனர். அதற்குள் விடிந்து விட்டதால் அரை குறையாக எரிந்த சடலத்தை, அப்படியே வீசி விட்டு மர்ம கும்பல் ஓட்டம் பிடித்திருப்பது தெரியவந்தது.

  இதையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. ஆனால், மோப்பநாய் அந்த இடத்தையே சுற்றி சுற்றி வந்தது.

  இறந்து கிடந்தவரின் வலது கையில் ஆங்கிலத்தில் எஸ்.ஆர்.எம். என்று பச்சை குத்தப்பட்டிருந்தது.

  இடது கையில் 5 விரல்களும், நகக்கன்றுகள் இல்லாமல் மொட்டையாக இருந்தது.

  இதையடுத்து, போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×