என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோவில்பட்டியில் ரத்ததான முகாம்
  X

  கோவில்பட்டியில் ரத்ததான முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.


  கோவில்பட்டியில் ரத்ததான முகாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மகாத்மா காந்தி ரத்ததானக் கழகத்தின் 25-வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.
  • அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், மருத்துவர் சீனிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

  கோவில்பட்டி:

  மகாத்மா காந்தி ரத்ததானக் கழகத்தின் 25-வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.கோவில்பட்டி வணிக வைசிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு பள்ளிச் செயலர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.

  அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், மருத்துவர் சீனிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். நகர்மன்ற தலைவர் கருணாநிதி முகாமை தொடங்கி வைத்தார்.

  தொடர்ந்து ரத்ததானம் வழங்கியவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். தேவசேனா தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்ற 10 பேரிடம் ரத்தம் சேகரித்தனர்.

  இதில் ரத்ததானக் கழக துணைத் தலைவர் சார்லஸ், ஆசிரியை முருகசரஸ்வதி, உரத்த சிந்தனை வாசகர் வட்டத் தலைவர் சிவானந்தம், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, பள்ளி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஏற்பாடுகளை ரத்ததான கழக நிறுவன தலைவர் தாஸ் செய்திருந்தார்.


  Next Story
  ×