search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் சாலையோர மின்கம்பங்களால் வாகன ஓட்டிகள் அச்சம்- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    நெல்லை-தென்காசி சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தை படத்தில் காணலாம்.


    நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் சாலையோர மின்கம்பங்களால் வாகன ஓட்டிகள் அச்சம்- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    • நான்கு வழி சாலை பணியில் ஒருபுறம் சாலை முடிவுற்ற நிலையில் மற்றொரு புறம் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
    • குற்றாலத்தில் சீசன் களை கட்டி உள்ளதால் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள ராமச்சந்திர பட்டணத்திலிருந்து மேலமெஞ்ஞானபுரம் வரையில் அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலையின் ஓரங்களில் நடப்பட வேண்டிய மின்கம்பங்கள் சிலவற்றை புதிதாக அமைக்கப்பட்ட சாலை ஓரத்திலேயே அமைத்து தார் போடப்பட்டதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வண்ணம் உள்ளது.

    5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் நான்கு வழி சாலையிலேயே உள்ளன. நான்கு வழி சாலை பணியில் ஒருபுறம் சாலை முடிவுற்ற நிலையில் மற்றொரு புறம் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

    எனவே சாலை பணி முடிவற்ற ஒரு பகுதியில் வாகனங்கள் எதிர் எதிரே செல்வதால் சாலையோரங்களில் நிறுவப்பட வேண்டிய மின்கம்பங்கள் சாலையின் உள்பகுதியில் நிற்கும் வண்ணம் அமைத்து சாலை போடப்பட்டுள்ளதால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    தற்போது குற்றாலத்தில் சீசன் களை கட்டி உள்ளதால் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே விபத்துகள் ஏற்படும் முன்பாக மின்கம்பங்களை சாலையின் வெளியே ஓரமாக நடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×