என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சிவகிரி பேரூராட்சியில் விழிப்புணர்வு பேரணி
  X

  அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்த போது எடுத்த படம்.


  சிவகிரி பேரூராட்சியில் விழிப்புணர்வு பேரணி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிவகிரி பேரூராட்சி அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி முக்கிய ரதவீதிகள் வழியாக வலம் வந்து பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவுபெற்றது.
  • மலைக்கோவில் சுற்றியுள்ள ஊரணிகள் மற்றும் கரைகளில் உள்ள பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

  சிவகிரி:

  சிவகிரி பேரூராட்சியில் உள்ள பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டிய அவசியம் குறித்தும், பொது இடங்களில் குப்பைகளை கொட்டக்கூடாது என்பது குறித்தும் சேனைத் தலைவர் மேல்நிலைப்பள்ளி மற்றும் விவேகா பள்ளி மாணவ மாணவிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி, மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

  பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார். செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.

  சிவகிரி பேரூராட்சி அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி முக்கிய ரதவீதிகள் வழியாக வலம் வந்து பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவுபெற்றது. மேலும் மலைக்கோவில் சுற்றியுள்ள ஊரணிகள் மற்றும் கரைகளில் உள்ள பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

  பின்னர் சிவகிரி பேரூராட்சி சார்பில் மரக்கன்றுகளை யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், பேரூர் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், தென்மலை ஊராட்சி மன்ற தலைவர் மீனலதா முத்தரசு பாண்டியன், உள்ளார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ் ஆகியோர் நட்டு வைத்தனர்.

  இதனைத் தொடர்ந்து பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் முத்துக்குமாரசாமிக்கு ஆடி கிருத்திகையை முன்னிட்டு பால், தயிர், சந்தனம், குங்குமம், இளநீர், நெய் உட்பட 18 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

  அன்னதானத்தை யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, பேரூர் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அன்னதானம், சப்பர பவனி, பூஜைக்கான ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா குடும்பத்தினர் செய்திருந்தனர்.

  Next Story
  ×