search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில்  விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
    X

    மாரத்தான் போட்டி கொடியசைத்து தொடங்கப்பட்ட காட்சி.

    கோவில்பட்டியில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

    • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சாலை விபத்து இல்லா இந்தியாவை உருவாக்குவோம் என்பதை வலியுறுத்தி வட்டார போக்குவரத்து அலுவலகம், ரோட்டரி சங்கம், இந்தியன் கனரக வாகன ஓட்டுநர்கள் நலக்கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சாலை விபத்து இல்லா இந்தியாவை உருவாக்குவோம் என்பதை வலியுறுத்தி வட்டார போக்குவரத்து அலுவலகம், ரோட்டரி சங்கம், இந்தியன் கனரக வாகன ஓட்டுநர்கள் நலக்கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    போட்டிகள் ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவ- மாணவிகள் என தனித்தனியாக நடத்தப்பட்டன. பொதுப்பிரிவு ஆண்களுக்கு 25 கி.மீ., பெண்களுக்கு 20 கி.மீ., பள்ளி மாணவர்களுக்கு 12 கி.மீ., மாணவிகளுக்கு 10 கி.மீ. என போட்டியின் தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு தொடங்கிய போட்டிகளுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி. வெங்கடேஷ் கொடியசைத்து மாரத்தான் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து பள்ளி மாணவ- மாணவிகள் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ - மாணவிகள், இளைஞர்களுக்கு மத்தியில் தூத்துக்குடி 3-வது மைல் கிருபை நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சுகாதார துறை ஊழியர் 83வயதான சண்முகக்கனி ஆர்வமுடன் கலந்து கொண்டார்.

    போட்டியில் ஆண்கள் பொதுப்பிரிவில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த மாரி சரத் முதலிடத்தையும், பெண்கள் பொதுப்பிரிவில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம் கிராம கமிட்டி மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஐஸ்வர்யா முதலிடத்தையும், பள்ளி மாணவர்கள் பிரிவில் காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நி லைப்பள்ளி மாணவர் முகேஷ் முதலி–டத்தையும், பள்ளி மாணவிகள் பிரிவில் காட்டு நாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவி கனகலட்சுமி முதலிடத்தையும் பிடித்தனர்.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    Next Story
    ×