search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி
    X

    நிகழ்ச்சியில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின்கீழ் பைகள் வழங்கப்பட்டன.

    பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி

    • மோகனூர் பேரூராட்சியில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பிளாஸ்டிக் ஒழிப்பின் விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.
    • இதில் பொதுமக்களுக்கு மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின்கீழ் மக்கள் அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் தேர்வுநிலை பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பது தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து மோகனூர் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு பேரூராட்சி தலைவர் வனிதா தலைமை வகித்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கினார்.துணைத் தலைவர் சரவணகுமார் முன்னிலை வகித்தார்.

    செயல் அலுவலர் கோமதி பிளாஸ்டிக் பயன்படுத்துவது தடை விதிக்கப்பட்டது குறித்தும், பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கி கூறினார். முகாமில் பேரூராட்சி உறுப்பினர்கள்,இளநிலை உதவியாளர் சுரேஷ் ராஜ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மணி, கார்த்தி மற்றும் அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண் டனர். இதில் பொதுமக்களுக்கு மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின்கீழ் மக்கள் அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.

    Next Story
    ×