search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் தீக்குளிக்க முயற்சி
    X

    தீக்குளிக்க முயன்ற வாலிபர்.

    வாலிபர் தீக்குளிக்க முயற்சி

    • அப்போது ஒரு வாலிபர் கலெக்டர் அலுவலகத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
    • எனக்கு சொந்தமான நிலத்தை ஒருவரிடம் விற்பனை செய்தேன்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது ஒரு வாலிபர் கலெக்டர் அலுவலகத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து அதில் என்ற பெட்ரோலை சரசரவென உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பில் இருந்த போலீஸார் உடனடியாக ஓடி சென்று அவரிடம் இருந்து பெட்ரோல் கேனை பறித்து எறிந்தனர். தொடர்ந்து அவர் மீது தண்ணீர் ஊற்றினார்.

    இதுகுறித்து அந்த நபரிடம் போலீசார் விசாரித்த போது அவர் தஞ்சையை அடுத்த மாப்பிள்ளை நாயக்கன்பட்டி மேலே தெருவை சேர்ந்த முருகேசன் (வயது 32) என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் முருகேசன் கூறும்போது:-

    எனக்கு சொந்தமான நிலத்தை ஒருவரிடம் விற்பனை செய்தேன். அதற்கான ரூ.17 லட்சத்தில் அந்த நபர் ரூ.7 லட்சம் மட்டும் கொடுத்துள்ளார். மீதி பணத்தை நான் கேட்டபோது எனக்கு மிரட்டல் விடுத்து தராமல் காலம் தாழ்த்தி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து மீதி பணத்தை பெற்றுத் தர வேண்டும் என்று கூறினார்.

    இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×