search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வல்லத்தில், அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு கூட்டம்
    X

    கூட்டத்தில் மாவட்ட தலைவர் சுப்பு என்கிற சுப்ரமணியன் பேசினார்.

    வல்லத்தில், அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு கூட்டம்

    • புகையிலை பொருட்கள் விற்பனை செய்யாத கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
    • புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய சொல்லி யாரேனும் வலியுறுத்தினால் புகார் அளிக்கலாம்.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள வல்லத்தில் அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு கூட்டம் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் சுப்பு என்கிற சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் வல்லம் அனைத்து வணிகர் சங்கத்தின் புதிய தலைவராக ரவிச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.

    இதில் தஞ்சை மாவட்ட தலைவர் சுப்பு என்கிற சுப்ரமணியன், துணைத்தலைவர் பெருமாள், மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட இணை செயலாளர் முருகையன், தொகுதி செயலாளர் கண்ணுச்சாமி உள்பட பலர் பேசினர்.

    பின்னர் அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் சுப்ரமணியன் பேசியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த வாரம் 109 கடைகளுக்கு மேல் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக கூறி சீல் வைக்கப்பட்டுள்ளது.

    இதில் பல கடைகள் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருந்த நிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. புகையிலை பொருட்களை விற்பனை செய்யாத கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா சுகாதாரத் துறை அதிகாரிகளை சென்னையில் சந்தித்து பேசி உள்ளார்.

    தஞ்சை மாவ ட்ட அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் தஞ்சை மாவ ட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து பேசி உள்ளோம்.

    வணிகர்களின் பிரச்சனைகள்

    குறித்து கலெக்டரிடம் தெரிவித்துள்ளோம். கலெக்டரும் நல்ல மேலான ஆலோசனைகளை தெரிவித்தார்.

    தாலுக்கா வாரியாக அந்தந்த தாசில்தாரை வணிகர்கள் நேரில் சென்று சந்தித்து எழுத்து பூர்வமாக கொடுத்து விட்டு கடைகளை திறந்து கொள்ளுமாறு தஞ்சை மாவட்ட கலெக்டர் அறிவு றுத்தி உள்ளார்.

    இதற்காக தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு தஞ்சை மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

    மேலும் தடை செய்யப்பட்ட‌புகையிலை பொருட்களை தொடர்ந்து யாரேனும் வியாபாரிகள் விற்பனை செய்தால் அவர்கள் மீது அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்படும்.

    அதே போல் வணிகர்களை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய சொல்ல யாரேனும் வலியுறுத்தினாலும், அல்லது வாடிக்கையாளர்கள் புகையிலை பொருட்களை கேட்டாலோ இது குறித்து வணிகர்கள் சங்கத்தின் புகார் அளிக்கலாம்.

    தஞ்சை மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். அனைத்து பெட்டி கடைகளிலும் புகையிலை விற்பனை செய்யப்பட மாட்டாது என‌ அறிவிப்பு போர்டு வைக்கப்படும்.

    மேலும் ஓட்டல்களில் மற்றும் ஓட்டல்கள் அருகே மது குடிப்பவர்களுக்கு அனுமதி வழங்க கூடாது என வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×