என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருவெண்ணைநல்லூரில் விதை சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கு பூமிபூஜை
- திருவெண்ணைநல்லூரில் விதை சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கு பூமிபூஜை தொடங்கப்பட்டது.
- ரூ.38 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையம் விதை சேமிப்பு கிடங்கு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூரில் வேளாண்மைத்துறை சார்பில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் விதை சேமிப்புக் கிடங்கு பூமிபூஜை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வேளாண்மைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் தலைமை தாங்கினார். விழுப்புரம் வேளாண்மை இணை இயக்குனர் சண்முகம், பேரூராட்சி துணை தலைவர் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி வேளாண்மை இயக்குனர் பிரேமலதா வரவேற்றார். நிகழ்ச்சியில் திருவெண்ணைநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம்கணேசன் கலந்துகொண்டு ரூ.38 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையம் விதை சேமிப்பு கிடங்கு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க. நகர செயலாளர் பூக்கடை கணேசன், கள்ளக்குறிச்சி செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர் சித்ரா, திருக்கோவிலூர் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கிருஷ்ணராஜ், நகர பொருளாளர் சையத் நாசர், இளைஞரணி சுலைமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.