search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில்  சப்-இன்ஸ்பெக்டர் பணி தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது
    X

    பெண் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடந்தது. இதில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.

    சேலம் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணி தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது

    • தமிழ்நாடு அரசு காவல் துறையில் 444 சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டது.
    • சேலம் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் சான்றிதழ் சரிபார்ப்பும், உடல் தகுதி தேர்வு தொடங்கியது. இதில் 413 பேர் அழைக்கப்பட்டனர்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு காவல் துறையில் 444 சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டது. இதையடுத்து சேலம், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பட்டதாரிகள் ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த மாதம் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற 2005 பேர் மற்றும் காவல் துறையில் தற்போது பணியில் உள்ள 453 பேர், கடந்த தேர்வின்போது கர்ப்பிணியாக இருந்த பெண்கள் நீதிமன்ற உத்தரவுபடி மீண்டும் தேர்வு கோரியோர் 26 பேர் என மொத்தம் 2484 பேருக்கு இன்று, நாளை என 2 கட்டங்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை, கோவை, மதுரையில் ஆண்களுக்கும், சேலம், திருச்சியில் பெண்களுக்கும் என 5 மாநகரங்கள் போலீஸ் மைதானத்தில் தேர்வு தொடங்கியது. அதன்படி இன்று சேலம் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் சான்றிதழ் சரிபார்ப்பும், உடல் தகுதி தேர்வு தொடங்கியது. இதில் 413 பேர் அழைக்கப்பட்டனர். முதற்கட்ட தேர்வுக்கு அழைக்கப்பட்ட தேர்வர்கள், தங்களது கல்வி சான்றிதழை அங்கிருந்த அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். அவர்கள் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு உடற்தகுதி தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    Next Story
    ×