search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில்   சாலையோர வியாபாரிகள் தினம் நிகழ்ச்சி
    X

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சுதா பேசிய போது எடுத்த படம்.

    நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகள் தினம் நிகழ்ச்சி

    • நாமக்கல்லில் சாலையோர வியாபாரிகள் 1174 பேர் உள்ளனர்.
    • இதில் 508 நபருக்கு வட்டியில்லா வங்கி கடன் வழங்கப்பட உள்ளன.

    நாமக்கல்:

    மத்திய அரசின் பிரதம மந்திரி யோஜனா திட்டத்தின் படி நாமக்கல்லில் சாலையோர வியாபாரிகள் 1174 பேர் உள்ளனர். இதில் 508 நபருக்கு வட்டியில்லா வங்கி கடன் வழங்கப்பட உள்ளன. இந்நிலையில் நகராட்சி அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி ஆணையர் சுதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சி தலைவர் கலாநிதி, துணை தலைவர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் சுதா பேசுகையில், சாலையோர வியாபாரிகள் வங்கி வழங்கும் கடனை பெற்று பயனடைய வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்ய வேண்டும். வங்கி கடன் பெற்றவர்கள் தவறாமல் கடனை கட்டி மேலும் கடனை பெற்று வியாபாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். கூட்டத்தில வங்கியாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், சாலையோர வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×