search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மொரப்பூர் ரெயில் நிலையத்தில்  புதிதாக மரக்கன்றுகள் நடவு
    X

    மொரப்பூர் ெரயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா நேரில் ஆய்வு செய்தார்.

    மொரப்பூர் ரெயில் நிலையத்தில் புதிதாக மரக்கன்றுகள் நடவு

    • மொரப்பூர் ெரயில் நிலையத்தில் தென்னக ெரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா நேரில் ஆய்வு செய்தார்.
    • கழிப்பறைகள், குடிநீர் வசதி, லிஃப்ட் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ெரயில் நிலையத்தில் தென்னக ெரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா நேரில் ஆய்வு செய்தார்.

    அப்போது ெரயில் நிலையத்தில் புதிதாக மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அதனை தொடர்ந்து ெரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள், குடிநீர் வசதி, லிஃப்ட் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது ஒன்றிய குழு தலைவர் இ.டி.டி.சுமதி செங்கண்ணன், ரெயில்வே நிலைய மேலாளர் உலகநாதன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் இ.டி.டி. செங்கண்ணன், ரத்தினவேல், கம்பைநல்லுர் பேரூராட்சி தலைவர் த.வடமலை முருகன், மொரப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் உமாராணி உலகநாதன், தாசரஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி ரங்கநாதன், ெரயில் பயணிகள் சங்கத் தலைவர் கு.சென்ன கிருஷ்ணன், செயலாளர் ரகுநாதன், துரை, கவுதமன், அனைத்து வணிகர் சங்க தலைவர் சி.முத்து, செயலாளர் அ.மோகன்ராசு, பொருளாளர் முருகன், அருணாசலம், கொங்கு கல்வி அறக்கட்டளை தாளாளர் தீ.சந்திரசேகர், முல்லை கல்வி அறக்கட்டளை தாளாளர் பி.ராஜூ, அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் அ.செல்வம், முன்னாள் ஊராட்சி தலைவர் திருமால், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் அண்ணாதுரை, காங்கிரஸ் நிர்வாகி மணி உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×