search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை டாக்டர்கள் சரியாக பணிக்கு வருகிறார்களா? -அதிகாரி ஆய்வு
    X

    கால்நடைகளுக்கு போடப்படும் பசுந்தீவன பொருள் வளர்ப்பு குறித்து அதிகாரி ஆய்வு செய்தார்.

    கால்நடை டாக்டர்கள் சரியாக பணிக்கு வருகிறார்களா? -அதிகாரி ஆய்வு

    • பசுந்தீவன பொருள் வளர்ப்பு குறித்தும், அவற்றை அறுக்கும் புல்வெட்டும் கருவி மானியத்தில் வழங்கப்ப–ட்டுள்ளது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
    • கண்டியூர் மற்றும் ஆலக்குடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கால்நடை மருந்தகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி திட்ட முகமை அதிகாரி டாக்டர் முருகேசன். இவர் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் தஞ்சையை அடுத்த திருக்கானூர் பட்டி பகுதியில் கால்நடைகளுக்கு போடப்படும் பசுந்தீவன பொருள் வளர்ப்பு குறித்தும் அவற்றை அறுக்கும் புல்வெட்டும் கருவி மானியத்தில் வழங்கப்ப–ட்டுள்ளது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து திருமலைசமுத்திரம் பகுதியில் விதவைகளின் மறுவாழ்வுக்காக வழங்கப்பட்டுள்ள ஆடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? எனவும் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அம்மன்பேட்டையில் உள்ள கால்நடை மருந்தகத்திற்கு சென்று அங்கு டாக்டர்கள் முறையாக பணிக்கு வருகிறார்களா? என பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து கண்டியூர் மற்றும் ஆலக்குடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கால்நடை மருந்தகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தஞ்சை மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் டாக்டர் தமிழ்ச்செல்வன், உதவி இயக்குனர்கள் சையத் அலி, பழனிவேல், கால்நடை டாக்டர்கள் செரீப், சரவணன், லாவண்யா மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×