search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழுதான கைபேசிகளை ஒப்படைக்க அங்கன்வாடி ஊழியர்கள் முடிவு
    X

    திருவாரூரில் அங்கன்வாடி ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது.

    பழுதான கைபேசிகளை ஒப்படைக்க அங்கன்வாடி ஊழியர்கள் முடிவு

    • கூட்டத்தில் அங்கன்வாடி பணிகளை மேற்கொள்வதற்காக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கைபேசிகள் முற்றிலும் பழுதடைந்து விட்டன.
    • பணி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூரில் மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பிரேமா தலைமை வகித்தார். கூட்டத்தில் சிஐடியு மாநில துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் தவமணி, சிஐடியு மாவட்டச் செயலாளர் முருகையன், மாவட்டத் தலைவர் மாலதி, மாவட்டப் பொருளாளர் வைத்தியநாதன் மற்றும் அங்கன்வாடி சங்க நிர்வாகிகள் திரிபுரசுந்தரி, ராஜலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அங்கன்வாடி பணிகளை மேற்கொள்வதற்காக ஊழியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கைபேசி வழங்கப்பட்டது. தற்போது இந்த கைபேசிகள் முற்றிலும் பழுதடைந்து விட்டன. ஆனாலும் பழுதடைந்த கைபேசிகளை வைத்து பணி செய்ய வேண்டும் என வற்புறுத்தப்படுகிறது.

    இதனை கண்டித்து வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவல ர்களிடம் கைபேசியை ஒப்படைப்பு என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மூன்றாண்டு பணி முடித்த அங்கன்வாடி உயர்வு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பதவி உயர்வில் சென்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வை வழங்க வேண்டும்.

    எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு அனுபவமிக்க அங்கன்வாடி ஊழியர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும். சில்லறை செலவினம் பயணப்படி ஆகியவைகளை உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து ஊழியர்களையும் பணி வரன்முறை செய்ய வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தரமணியில் உள்ள இயக்குனர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ள காத்திருப்பு போராட்ட த்தில் திருவாரூர் மாவ ட்டத்திலிருந்து ஏராளமா னவர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. இறுதியில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மாலதி நன்றி கூறினார்.

    Next Story
    ×