என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆறுமுகநேரி சுடுகாடு அருகே மரத்தில் பிணமாக தொங்கிய முதியவர்
Byமாலை மலர்8 April 2023 8:05 AM GMT
- புதூர் அருகே சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் உள்ள ஆலமரத்தில் நேற்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் தூக்கில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- இது பற்றி காயல்பட்டினம் தென்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் மோகன் பிரபாகர், ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி பேயன்விளை புதூர் அருகே சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் உள்ள ஆலமரத்தில் நேற்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் தூக்கில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி காயல்பட்டினம் தென்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் மோகன் பிரபாகர், ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
தூக்கு போட்டு இறந்த நபர் வேட்டி மற்றும் வெள்ளை சட்டை அணிந்து இருந்தார். அவர் யார்? என்பது பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்பது பற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×