search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நூதன முறையில் பணத்தை திருட முயற்சி
    X

    நூதன முறையில் பணத்தை திருட முயற்சி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடைக்கு நேற்று இரவு வெளிநாட்டைச் சேர்ந்த 2 பேர் வந்தனர். 2 பேரும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் போல இருந்தனர்.
    • இந்திய பணத்தை கடையில் இருந்தவர் எடுத்துக்காட்டிய போது, அந்த பணத்தை வாங்கிப் பார்த்த ஒருவர் அதனை மணி பர்சுக்கு பின்னால் மறைத்து வைத்து திருட முயன்றார்.

    நாமக்கல்:

    நாமக்கல் பஸ் நிலையம் அருகே, நாமக்கல் மொபைல் சர்வீஸ் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு நேற்று இரவு வெளிநாட்டைச் சேர்ந்த 2 பேர் வந்தனர். 2 பேரும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் போல இருந்தனர்.

    அவர்கள் கடையில் இருந்த நபரிடம், வெளிநாட்டு பணத்தை மாற்ற வேண்டும். இந்திய பணம் எப்படி இருக்கும்? என்று பேச்சு கொடுத்தனர். இந்திய பணத்தை கடையில் இருந்தவர் எடுத்துக்காட்டிய போது, அந்த பணத்தை வாங்கிப் பார்த்த ஒருவர் அதனை மணி பர்சுக்கு பின்னால் மறைத்து வைத்து திருட முயன்றார்.

    இதனை பார்த்த அங்கிருந்து மற்றொரு ஊழியர், அவரை கையும் களமாக பிடித்து போலீஸ் என கத்தினார். உடனே அங்கிருந்து ஓட்டம் பிடித்த 2 பேரும் தயாராக நின்ற காரில் ஏறி தப்பி சென்றனர்.

    இதேபோல், நாமக்கல் காய்கறி மார்க்கெட் சென்ற அவர்கள், பணத்தை மாற்ற வேண்டும் என்று கூறி ஒரு கடைக்காரரிடம் இந்திய பணத்தை காட்டுமாறு கேட்டனர். அதனை வாங்கி பார்த்தவர்கள், அங்கும் இதேபோல நூதன முறையில் திருட முயன்றனர். இதையறிந்து காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் விரட்டியதால், அங்கிருந்து 2 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து நாமக்கல் நகர இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மற்றும் போலீசார் விசாரண நடத்தி வருகிறார்கள். மேலும் கேமராவில் பதிவான காட்சிகள் வைத்து அவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

    Next Story
    ×