என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கலெக்டரை சந்தித்து மனு கொடுத்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
  X

  கலெக்டரை சந்தித்து மனு கொடுத்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவைப்புதூர் - புட்டுவிக்கி செல்லும் சாலை உக்கடம் செல்லும் சாலை சந்திப்பு வரை நெடுஞ்சாலைத்துறை மூலம் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட வேண்டும்.
  • எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய பணிகள் குறித்து தனித்தனியாக மனு கொடுத்தனர்.

  கோவை :

  முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 234 தொகுதிகளிலும் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய பணிகள் குறித்து திட்டங்களை மாவட்ட கலெக்டரிடம் எம்.எல்.ஏ.க்கள் அளிக்கலாம் என அறிவித்தார்.

  அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள 9 தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் இன்று கலெக்டரிடம் மனு அளித்தனர். தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

  தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புறப்பகுதிகளில் பொது மக்கள் மிகவும் எதிர்பார்க்கும் கீழ்கண்ட திட்டப்பணிகளை நிறைவேற்றித்தர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

  முன்னாள் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட அத்திக்கடவு - அவிநாசி திட்டம் II செயல்படுத்தவும், அத்திக்கடவு அவிநாசி திட்டம் I-ல் விடுபட்ட கோவை மாவட்ட, தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளை இணைத்து திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

  தொண்டாமுத்தூர் ஒன்றியம் போளுவாம்பட்டி ஊராட்சி மற்றும் வெள்ளிமலைப்பட்டிணம் ஊராட்சி பகுதியில் கல்லாறு பாபநாசம் - .இணைத்து புதிய அணை கட்டப்பட வேண்டும். இதனால் இப்பகுதி அணையிலிருந்து, தென்மேற்கு முழுவதும் பாசன வசதி மேம்பட்டு நீர் ஆதாரம் பெருகும்.

  தொண்டாமுத்தூர் ஒன்றியம் தென்னமநல்லூர் ஊராட்சி, சித்திரைச்சாவடி அணையில் இருந்து தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களிலும், மின்மோட்டார் வைத்து நரசீபுரம் முதல் உலியம்பாளையம் வரை உள்ள 25 குட்டைகளுக்கும், நாதேகவுண்டன்புதூர் முதல் ஆறுமுககவுண்டனூர் வரை உள்ள 15 குட்டைகளுக்கும் மழைநீரை சேமிக்கும் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

  தொண்டாமுத்தூர் ஒன்றிய பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதியாகும், இங்கு வேளாண்மை தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்பகுதி விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான வேளாண் உற்பத்தி பொருட்களை பாதுகாக்க "குளிர்பதன கிடங்கு" அமைத்து தர வேண்டும்.

  எனது தொகுதியில் உள்ள கோவை குற்றாலம் அருவி - சுற்றுலா தளமாக மேம்படுத்தவும் அதற்குண்டான சாலை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும்.

  தொண்டாமுத்தூர் தொகுதியில், கோவை மாநகராட்சி பகுதியான தடாகம் ரோடு, லாலிரோடு சந்திப்பில் (ஜிசிடி அருகில்) உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்.

  கோவைப்புதூர் - புட்டுவிக்கி செல்லும் சாலை உக்கடம் செல்லும் சாலை சந்திப்பு வரை நெடுஞ்சாலைத்துறை மூலம் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட வேண்டும். தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்திடும் வகையில் அவர்களின் விருப்பத்திற்கேற்ப கிரிக்கெட் மைதானம் அமைத்து தர வேண்டும்.

  எனது சட்டமன்ற தொகுதியை மேம்படுத்தவும் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான மேற்கண்ட முக்கிய பணிகளை உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம் என்ற புதிய முன்னோடி திட்டத்தின் கீழ் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரான எனது பரிந்துரையினை ஏற்று நிறைவேற்ற ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  இவ்வாறு அவர் அளித்த மனுவில் கூறி இருந்தார்.

  இதேபோல் மற்ற எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய பணிகள் குறித்து தனித்தனியாக மனு கொடுத்தனர்.

  Next Story
  ×