search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே விபத்து:  அரசு பஸ் முறையாக பராமரிக்கப்படாததால் ஏற்பட்டதா?  பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டால் பரபரப்பு
    X

    விபத்தில் சிக்கிய லாரி மற்றும் அரசு பஸ்.

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே விபத்து: அரசு பஸ் முறையாக பராமரிக்கப்படாததால் ஏற்பட்டதா? பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டால் பரபரப்பு

    • பாப்பிரெட்டிப்பட்டி அருகே பஸ்- லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
    • அரசு பஸ் முறையாக பராமரிக்கப்படாததே காரணம் என்று புகார் கூறுகின்றனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம் அரூரில் இருந்து நேற்று மாலை அரசு டவுன் பஸ் 30 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு கொண்டு பொம்மிடி நோக்கி வந்து கொண்டிருந்தது. மாலை வேலை என்பதால் வேலைக்கு சென்று திரும்பிவர்கள் கூட்டத்தால் பேருந்து நிரம்பி வழிந்தது. இந்த டவுன் பஸ் கோபாலபுரம் சர்க்கரை ஆலை, வழியாக மருக்காலம்பட்டி ஏரியை தாண்டி சென்று கொண்டிருந்தது.

    டவுன்பஸ்சை பொம்மிடி வினோபாஜி தெருவைசேர்ந்த டிரைவர் மாது ராஜ்(56) மெணசியை சேர்ந்த சேது (54) கண்டக்டராகவும் இருந்தனர். சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் இருந்து சிமெண்ட் கல் ஏற்றிக்கொண்டு வந்த டாரஸ் லாரி டவுன் பஸ் மீது பயங்கரமாக நேருக்கு நேர் அதிவேகமாக மோதியது.

    இதில் டவுன் பஸ் வலது புறமாக பயங்கர சேதமானது இதனால் பயணிகள் அனைவருக்கும் தலை.கால் மற்றும் உடல் முழுவதும்காயம் ஏற்பட்டது சிலர் பேருந்தி ல் இருந்து தூக்கி விசப்பட்டதில் சிலருக்கு கால் முறிவு ஏற்பட்டது

    பயங்கர சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். பேருந்து ஓட்டுனரும் லாரி ஓட்டுநர் இடிபாடுகளில் சிக்கி தவித்தனர். அவர்களை பொதுமக்கள் ஜே.சி.பி. எந்திரம் வரவழைத்து இடிபாடுகளை அகற்றி மீட்டனர்.

    இதில் பஸ் டிரைவர் மாதுராஜ், லாரி டிரைவர் செந்தில், மெனசியை சேர்ந்த அழகரசன் (55), அமுதா (30), கடத்தூரை சேர்ந்த நர்ஸ் வினோதினி (26) ஆகிய 6 பெண்கள் உள்ளிட்ட 22 பேர் கை, கால்களில் பலத்த காயமடைந்தனர்.

    உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தெரிவிக்கையில் இந்த பேருந்து பொம்மிடி அரசு போக்குவரத்து கழக பணிமனை சொந்தமானது எனவும் இந்த பணிமனையில் 44 பேருந்துகள் உள்ளதாகவும் பராமரிப்பு பணியை சரிவர செயல்படாததால் இந்த பணிமனையில் பேருந்துகள் பல இடங்களில் விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்றது எனவும் குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு ஒகேனக்கல் பகுதியில் மலைப்பகுதியில் விபத்து திருச்சி அருகே விபத்து என பல விபத்துக்களையும் ஏற்படுத்தி பல உயிர்களை பலி வாங்கி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    எனவே தருமபுரி மாவட்ட அரசு போக்குவரத்து பணிமனைக்கு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு மனித உயிர்களை காக்கும் விதத்தில் தரமான பேருந்துகளை வழித்தடங்களை இயக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×