என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கம்பைநல்லூர் அருகே விபத்து: மோட்டார் சைக்கிள்கள் மோதலில் 2 பேர் சாவு
  X

  கம்பைநல்லூர் அருகே விபத்து: மோட்டார் சைக்கிள்கள் மோதலில் 2 பேர் சாவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சின்னசாமி ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளும், பாலகிருஷ்ணன் ஓட்டி வந்த சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டன.
  • சிகிச்சை பெற்று வந்த சின்னசாமி,மூக்கன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  மொரப்பூர்,

  தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே உள்ள சவுளூர் பகுதியைச் சேர்ந்தவர் வேடியப்பன் மகன் சின்னசாமி (வயது 60). இவர் நேற்று முன்தினம் சவுளூரிலிருந்து கம்பைநல்லூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

  அப்போது பாலகிருஷ்ணன் (50) என்பவரும், அவரது உறவினரான மூக்கன் என்பவரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஆல்ரப்பட்டி அருகே சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக சின்னசாமி ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளும், பாலகிருஷ்ணன் ஓட்டி வந்த சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டன.

  இந்த விபத்தில் சின்னசாமி மற்றும் மூக்கன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் இவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த சின்னசாமி,மூக்கன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  மேலும் காயம் அடைந்த பாலகிருஷ்ணன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×