என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தாய்-மகன் கைது
  X

  கோப்பு படம்

  திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தாய்-மகன் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முன் விரோதம் காரணமாக தாக்கப்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • தலைமறைவான 2 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  குள்ளனம்பட்டி:

  திண்டுக்கல் மாவட்டம் வீரக்கல்லை சேர்ந்த இருசப்பன் மனைவி காந்தாயிஅம்மாள்(80). கணவர் இறந்துவிட்ட நிலையில் தனது மகன் சரவணக்குமாருடன் வசித்து வந்தார். இவர்களுக்கும், அதேபகுதியை சேர்ந்த கருப்பன்(52) குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

  கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதியன்று இது தொடர்பாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் கருப்பன், அவரது மனைவி லட்சுமி(40), மகன் ரஞ்சித்(19) ஆகியோர் சேர்ந்து காந்தாயிஅம்மாளை கடுமையாக தாக்கினர்.

  இதில் படுகாயமடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து செம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குபதிவு செய்து கருப்பனை கைது செய்தனர். சிகிச்சையில் இருந்த காந்தாயிஅம்மாள் பின்னர் உயிரிழந்தார்.

  இதனையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. மூதாட்டியை தாக்கிய லட்சுமி மற்றும் அவரது மகன் ரஞ்சித்தை தீவிரமாக தேடி வந்தனர். உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி முருகேசன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் கொண்ட தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்தனர்.

  விசாரணைக்கு பின் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

  Next Story
  ×