search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளம்  வட்டத்தில்   வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் முகாம்
    X

    சாத்தான்குளம் வட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் முகாம்

    • வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • வாக்குசாவடி மையங்களில் தாசில்தார் தங்கையா பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வட்டத்தில் உள்ள வாக்கு சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க வாக்காளர்களுக்கு படிவம் பி வழங்கப்பட்டது. சாத்தான்குளம் , பேய்க்குளம் பகுதியில் வாக்குசாவடி மையங்களில் தாசில்தார் தங்கையா பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது பி படிவத்தை வழங்கி வாக்காளர்கள் அனைவரும் ஆதார் எண்ணை கண்டிப்பாக வாக்காளர் பட்டியலில் இணைத்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் வருவாய் ஆய்வாளர்கள் பாலகங்காதரன், ஜெயா, கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பசாமி, வேல்முருகன் துரைசிங், விசுவநாதன் மசபியேல், வாக்குசாவடி நிலை அலுவலர்கள் வள்ளிசுந்தரி, வீரலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×