என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதனுக்கு ஆலங்குளத்தில் சிறப்பான வரவேற்பு -யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் நடந்தது
  X

  ஆலங்குளம் காமராஜர் சிலைக்கு தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள்.


  தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதனுக்கு ஆலங்குளத்தில் சிறப்பான வரவேற்பு -யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் நடந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஏற்கனவே மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த பொ.சிவபத்மநாதன், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக ஆலங்குளம் வந்தார்
  • ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் எம் திவ்யா மணிகண்டன் தலைமையில் மேள தாளங்கள் முழங்க தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  ஆலங்குளம்:

  தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருக்கு ஆலங்குளத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

  ஏற்கனவே மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த பொ.சிவபத்மநாதன், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக ஆலங்குளம் வந்தார். அவருக்கு ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் எம் திவ்யா மணிகண்டன் தலைமையில் மேள தாளங்கள் முழங்க தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  அம்பாசமுத்திரம் சாலையில் இருந்து பேருந்து நிலையம் வரை 101 தேங்காய் விடலை போடப்பட்டு ஊர்வலமாக வந்த பின்னர் பொ. சிவபத்மநாதன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை ஊர்வலம் நீடித்தது.

  வரவேற்பு நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஊராட்சித் தலைவர் தமிழ்செல்வி போஸ், ஒன்றிய தி.மு.க. செயலர்கள் செல்லதுரை, அன்பழகன், அரசு ஒப்பந்த தாரர்கள் மாரிதுரை, மணிகண்டன், இராமகிருஷ்ணன், கவுன்சிலர் சுந்தரம், உதயநிதி நற்பணி மன்ற மாவட்ட துணை அமைப்பாளர் அருணன், உதயநிதி ஸ்டாலின் ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமரன்உ ள்பட பலர் பங்கேற்றனர்.


  Next Story
  ×