search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை பல்கலைக்கழகத்தில் இருபெரும் விழா
    X

    மாணவ மன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்ற காட்சி.

    நெல்லை பல்கலைக்கழகத்தில் இருபெரும் விழா

    • நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக குற்றவியல் மற்றும் குற்றநீதியியல் துறையில் இருபெரும் விழாவாக குற்றவியல் மாணவர் மன்ற தொடக்க விழா மற்றும் பொருளாதார குற்றங்களின் புலனாய்வு பயிலரங்கம் பல்கலைக்கழக செனட் அரங்கத்தில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை குற்றவியல்துறை பேராசிரியர்கள், ஆய்வு மற்றும் முதுநிலை மாணவர்கள் செய்திருந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக குற்றவியல் மற்றும் குற்றநீதி துறையில் இருபெரும் விழாவாக குற்றநீதி மாணவர் மன்ற தொடக்க விழா மற்றும் பொருளாதார குற்றங்களின் புலனாய்வு பயிலரங்கம் பல்கலைக்கழக செனட் அரங்கத்தில் நடைபெற்றது.

    குற்றவியல் துறைத்தலைவர் மாதவசோமசுந்தரம் வரவேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், குற்றநீதி மாணவர் மன்றத்தினை தொடங்கி வைத்து மன்ற உறுப்பினர்களை உறுதிமொழி ஏற்கச் செய்து மாணவர்களின் படைப்பாற்றல், புதுமைகள் மற்றும் புதிய எண்ணங்களை மாணவர் மன்றங்கள் மூலமே செயல்படுத்த முடியும் என்றும், அரசின் புதிய செயல்திட்டங்கள் அனைத்து மாணவர்களையும் சென்றடைவதற்கும் இதுபோன்ற மாணவ மன்ற உறுப்பினர்கள் பல்லைக்கழகத்திற்கும் மற்ற கல்லூரிகளுக்கும் சிறந்த முன்னுதாரணமாக சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்கள்.

    பின்னர் பொருளாதார குற்றங்களின் புலனாய்வு பயிலரங்கத்தினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முனைவர் கைலாசம், சமீப காலமாக பொருளாதார குற்றங்கள் மிக அதிக அளவில் நடக்கின்றன என்பதனையும், அதனை புலனாய்வு செய்வதற்கு உரிய 4 தொழில்நுட்ப முறைகளையும், அவைகள் செயல்படுத்த வேண்டிய முறைகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

    தொடர்ந்து மாணவர்கள் தங்களது சந்தேகங்களை கேள்விகளாக கேட்டு தெளிவடைந்தனர். முடிவில் மாணவ மன்ற செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை குற்றவியல்துறை பேராசிரியர்கள், ஆய்வு மற்றும் முதுநிலை மாணவர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×