search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெட்ரோல் ஊற்றி வாலிபர் தற்கொலை முயற்சி
    X

    பெட்ரோல் ஊற்றி வாலிபர் தற்கொலை முயற்சி

    • செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தனியார் நிறுவனம் தொடங்கியது.
    • செல்போன் கோபுரம் பணியை தொடங்கக்கூடாது என வலியுறுத்தியும், எதிர்ப்பு தெரிவித்தும் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவ ட்டம் பேராவூரணிபேரூராட்சிக்கு உட்பட்ட நாட்டாணிக்கோட்டை பகுதியில் தனியார் நிறுவனம் செல்போன் கோபுரம் அமைக்க முடிவு செய்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மீண்டும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை அந்த தனியார் நிறுவனம் தொடங்கியது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அந்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நேற்று (சனிக்கிழமை) தனியார் நிறுவனத்தினர் செல்போன் அமைக்கும் பணியை தொடங்கினர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவீந்திரன் (வயது37) என்பவர் செல்போன் (டவர்) கோபுரம் பணியை தொடங்கக்கூடாது என வலியுறுத்தியும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி காவல் ஆய்வாளர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரவீந்திரன் கையில் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்த னர். பின்னர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து செல்போன் டவர் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×