search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1410 கிலோ எடையுள்ள காரை தலைமுடியால் இழுத்து மாணவி சாதனை
    X

    காரை தலைமுடியால் கட்டி இழுத்துச் செல்லும் மாணவி சம்யுத்தா.

    1410 கிலோ எடையுள்ள காரை தலைமுடியால் இழுத்து மாணவி சாதனை

    • 1 நிமிடம் 10 விநாடியில் இழுத்து சென்று இலக்கை அடைந்து வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் அபிஷியல் ரெக்கார்டு உலக சாதனை படைத்தார்.
    • ஒரு நிமிடம் 46 வினாடியில் தலைமுடியில் காரைக்கட்டி இழுத்துச் சென்று இந்தியன் ரெக்கார்டும், ஆசிய ரெக்கார்டும் வாங்கியுள்ளார்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருபவர் சம்யுத்தா (வயது 12). இவர் தனது தலைமுடியில் 1410 கிலோ எடையுள்ள காரை கட்டி 110 மீட்டர் தூரத்தை, 1 நிமிடம் 10 விநாடியில் இழுத்துச் சென்று இலக்கை அடைந்து வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் அபிஷியல் ரெக்கார்டு உலக சாதனை படைத்தார்.

    அதன் ரெக்கார்டு ஆபீசர் ஷரிபா மேற்பார்வையில் இந்த உலக சாதனை நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டது. இவரது உலக சாதனை நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார், கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    சம்யுத்தா இதற்கு முன் தனது பத்தாவது வயதில் 990 கிலோ எடையுள்ள காரை 112.2 மீட்டர் தூரத்தை, ஒரு நிமிடம் 46 வினாடியில் தலைமுடியில் காரைக்கட்டி இழுத்துச் சென்று இந்தியன் ரெக்கார்டும், ஆசிய ரெக்கார்டும் வாங்கியுள்ளார்.

    இது குறித்து மாணவி சம்யுத்தா கூறும்போது, இந்த முயற்சிக்கு தனது பெற்றோர் வெங்கடேஷ் மற்றும் ஆஷா, பயிற்சியாளரான கராத்தே மாஸ்டர் இளையராஜா, உடற்கல்வி ஆசிரியர் கரோலின் மற்றும் உடற்பயிற்சியாளர் ரிச்சர்டு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் முக்கிய காரணம் என்றார்.

    இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் முத்துக்கு மார் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×