என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
நாமக்கலில் பரபரப்பு அரசு கல்லூரி பொறுப்பு முதல்வரிடம் தகராறு செய்த சஸ்பண்ட் முதல்வர்
- அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவியருக்கு பெற்றுக் கொடுக்கவில்லை.
- இதையடுத்து பால் கிரேஸ் கல்லூரியை விட்டு வெளியேறினார்.
நாமக்கல்:
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரி முதல்வராக இருந்த பால் கிரேஸ் (வயது 55) கடந்த மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இவர் மீது அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவியருக்கு பெற்றுக் கொடுக்கவில்லை, கல்லூரியில் சமூக நல்லி ணக்கத்தை பேணாமல் மாணவியர் மற்றும் அலுவலர்களு டன் சுமூகமாக செயல்படவில்லை என தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனால் கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி, பால் கிரேசை சஸ்பெண்ட் செய்தார்.
இந்த நிலையில் நேற்று பால் கிரேஸ் திடீரென கல்லூரிக்கு வந்தார். அங்கிருந்த பொறுப்பு முதல்வர் பாரதியிடம் சஸ்பெண்ட் ஆர்டருக்கு நீதிமன்றத்தில் தடையாணை வாங்கியுள்ளேன். அதனால் முதல்வர் பொறுப்பை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொறுப்பு முதல்வர் பாரதி, இதுபற்றி உடனடியாக கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தியை போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அப்போது, நீதிமன்ற உத்தரவை தன்னிடம் வந்து தருமாறு பால் கிரேசிடம் கூறும்படி கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்தார். இந்த விவரத்தை பால்கிரேசிடம், பொறுப்பு முதல்வர் பாரதி கூறினார்.
இதையடுத்து பால் கிரேஸ் கல்லூரியை விட்டு வெளியேறினார். இந்த சம்பவத்தால் நேற்று சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.