என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மேல கூட்டுடன்காடு பகுதியில் ரூ.6.75 லட்சம் மதிப்பில் புதிய நூலக கட்டிடம்- கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
  X

  நூலக கட்டிடத்தை  கனிமொழி எம்.பி. குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்த காட்சி.

  மேல கூட்டுடன்காடு பகுதியில் ரூ.6.75 லட்சம் மதிப்பில் புதிய நூலக கட்டிடம்- கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புதிய நூலக கட்டிடத்தை கனிமொழி எம்.பி. குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
  • கே.புதூரில் ரேசன் கடையை கனிமொழி எம்.பி. திறந்துவைத்தார்.

  தூத்துக்குடி:

  தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூட்டுடன்காடு ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 6.75 லட்சம் மதிப்பில் புதிதாக நூலகம் கட்டப்பட்டுள்ளது.

  திறப்பு விழா

  அதன் திறப்பு விழா நடைபெற்றது. அதனை கனிமொழி எம்.பி. குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

  நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன்பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ., தாசில்தார் செல்வகுமார், ஒன்றிய கவுன்சிலர் புதுக்கோட்டை முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன், தி.மு.க. பிரமுகர் பேச்சிமுத்து, கூட்டுடன்காடு இளைஞரணி மகாராஜா, சுப்பிரமணியன், முருகன், சிவ முருகன், மகாலிங்கம், கிளைச் செயலாளர் மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  ரேசன்கடை

  தொடர்ந்து கூட்டாம்புளியில் ரூ. 13.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரேசன் கடையை கனிமொழி எம்.பி. திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். பின்னர் கனிமொழி எம்.பி.யிடம் ஒன்றிய தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர் பால்ராஜ் தலைமையில் பொதுமக்கள் மனு கொடுத்தனர். அதில் கடந்த பல ஆண்டுகளாக ஸ்ரீவைகுண்டம் சாயர்புரம் -கூட்டாம்புளி - தூத்துக்குடி-மதுரை இடையே தடம் அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. அது கடந்த ஆட்சியில் நிறுத்திவிட்டனர். அந்த பேருந்தை இப்போது ஸ்ரீவைகுண்டம் - சாயர்புரம் - கூட்டாம்புளி -தூத்துக்குடி - ராமேஸ்வரம் இடையிலான பேருந்தாக வழித்தட மாற்றம் செய்து இயக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட கனிமொழி எம்.பி. பேருந்துகள் இயக்குவது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

  பின்னர் கே.புதூரில் ரூ.13.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரேசன் கடையை கனிமொழி எம்.பி. திறந்துவைத்தார். நிகழ்ச்சிகளில் கூட்டுடன்காடு ஊராட்சி மன்ற தலைவர்கள் மாங்கனி ஹரி பாலகிருஷ்ணன், சங்கர ஈஸ்வரி ஏசுவடியான், குமாரகிரி ஊராட்சி துணைத்தலைவர் முப்பிலியன், ஊராட்சிமன்ற செயலர்கள் நாராயணன், நல்லசிவம், கோமதி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×