என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புனித அந்தோணியார் ஆலயத்தின் ஆடம்பர தேர்பவனி திருவிழா
- ஆடம்பர தேர்பவனி விழா விமர்சையாக நடை பெற்றது.
- முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதி கோயில் அண்ணா சிலையில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 128-ம் ஆண்டு ஆடம்பர தேர்பவனி திருவிழா நடைபெற்றது.
விழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து ஆடம்பர தேர்பவனி விழா விமர்சையாக நடை பெற்றது.
இதையொட்டி, பங்குதந்தை சேவியர், உதவி பங்குத்தந்தை பெல்பிட் ஆண்டனி முன்னிலையில், சிறப்பு கூட்டுப்பாடல், திருப்பலி ஆகியவை நடந்தது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட மின்வி ளக்குகளாலும், மலர்களாலும் அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்ட ஆடம்பர தேர் புனிதம் செய்யப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
தொடர்ந்து வாணவேடி க்கையுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில், பசுபதிகோயில் புனித அந்தோணியார் ஆலயத்தின் அருள் தந்தை யர்கள், அருட்சகோதரிகள் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவி ற்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.