என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பெரியகுளம் அருகே கோவிலில் பொருட்கள் திருடிய மர்ம கும்பல்
  X

  கோப்பு படம்.

  பெரியகுளம் அருகே கோவிலில் பொருட்கள் திருடிய மர்ம கும்பல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெரியகுளம் அருகே கோவிலில் மர்ம நபர்கள் பொருட்களை திருடிச் சென்றனர்
  • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பெரியகுளம்:

  பெரியகுளம் அருகே வடுகபட்டி சாலையில் முக்கரை விநாயகர் கோவில் உள்ளது. இங்கு பெரியகுளம் வடகரையை சேர்ந்த செல்லப்பாண்டி (வயது52) என்பவர் பூசாரியாக உள்ளார்.

  சம்பவத்தன்று வழிபாடு முடிந்த பின்பு வழக்கம்போல் கோவிலை பூட்டி சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கோவிலின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கோவில் நிர்வாகிகள் மற்றும் தென்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  போலீசார் விசாரணையில் கோவிலில் இருந்த கைவிளக்கு, பித்தளை பொருட்கள் உள்பட ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×