என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  போதை மாத்திரை பதுக்கி விற்ற 5 பேர் கும்பல் கைது
  X

  போதை மாத்திரை பதுக்கி விற்ற 5 பேர் கும்பல் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போலீசாரை பார்த்ததும் அங்கு நின்ற 5 பேர் தப்பியோட முயன்றனர்.
  • 280 போதை மாத்திரைகள், 2 போதை ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

  கவுண்டம்பாளையம் -

  கோவை பெரியநா யக்கன்பாளையம் அடுத்து உள்ள பெட்டதாபுரம் அருகே பெரியநாயக்கன்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய பிரகாஷ் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

  அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கு நின்ற 5 பேர் தப்பியோட முயன்றனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கஞ்சா மற்றும் போதை மருந்து பதுக்கி விற்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

  பெட்டதாபுரம் அருகே அவர்கள் வசித்த வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு 100 கிராம் கஞ்சா, 280 போதை மாத்திரைகள், 2 போதை ஊசிகள் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  பெட்டதாபுரம் பிள்ளை யார் கோவில் வீதியை சேர்ந்த சரவணக்குமார் (24), பெரியமத்தும்பாளையம் மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (24), காரமடை விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த பாண்டித்துரை (22), தண்ணீர் பந்தல் தங்கமணி கார்டன் பகுதியை சேர்ந்த ஆதவ் பிரகாஷ் (21), பெட்டதாபுரம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த சக்திவேல் (21) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

  பின்னர் அவர்கள் ஜெயிலில் அடைக்க ப்பட்டனர். இவர்களில் சரவணகுமார் மற்றும் ஆதவ் பிரகாஷ் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×